போற்றவாரும் பெத்லேம் நகர் மீதினில்


33.         செஞ்சுருட்டி              ரூபக தாளம்

பல்லவி

          போற்றவாரும் பெத்லேம் நகர் மீதினில்
          புல்லில் பிறந்த மாவல்லமைத் தேவனை

அனுபல்லவி

1.         ஆதியிலிஸ்திரி வித்தென்னு மேவைக்கு
                        அன்புடன் வாக்கருளப்பட்ட நாயனார்
            ஜாதியாம் யூதர் குலமதில் தோன்றினார்
                        சமாதானம் சமாதானம் சமாதானம் பூமியில்       - போற்ற

2.         விண்ணுலகத்திலிருந்து ஏராளமாய்
                        வெண்ணுடை போர்த்து நல்தூதர் இறங்கியே
            மண்ணுலகில் வந்த புண்ணிய நாதர்க்கு
                        மங்களம் மங்களம் மங்களம் பாடியே                  - போற்ற

3.         தங்கச் சிம்மாசனம் பொன்னகர் வீதியும்
                        தள்ளிவிட்டு இந்தப் பாவியைத் தேடியே
            மங்கை எளிய கன்னியிடம் வந்ததோர்
                        மனுவேலர் திருநாமம் ஒருபோதும் மறவாதே      - போற்ற

4.         கல்லணையோ கட்டில் வெல்லை நகரிலே
                        காட்டுமட முமக்கேற்ற அரண்மனை
            புல்லணையோ மெத்தை செல்லக் குமாரனே
                        புதுமையிது புதுமையிது புதுமையிது புதுமையிது        - போற்ற

5.         நித்தியபிதாச்சுதன் ஆவியும் வாழ்கவே
                        நீனிலம் தன்னில் சபை தழைத்தோங்கவே
            சத்தியவேத விரோதிகள் மங்கவே
                        தாசனின் கீதம் இதயத்தில் தங்கவே                            - போற்ற

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு