மன்னுருவானார், ஆதிமன்னுருவானார்


28.         இங்கிலிஷ்                     ஏக தாளம்

பல்லவி

                   மன்னுருவானார், ஆதிமன்னுருவானார் - ஏதும்
                        தன்னிகரிலாத ஆதி மன்னுருவானார்

1.         மன்னன் தாவீது வம்சக்கன்னியாமாது - அந்தக்
            கன்னியென்னும் அன்னைமரி தன்னிடமாக
            தன்னிடமாக, ஆதி தன்னிடமாக - ஏதும்

2.         வல்லமைத் தேவன் தீர்க்கர் சொன்னமெய் ஜீவன் - சிறு
            வெல்லைமலைக் கல்லுறுத்த புல்லணையிலே
            புல்லணையிலே, ஆதி புல்லணையிலே - ஏதும்

3.         எப்பொருள் மேலா நின்ற விற்பன நூலான் - ஆதி
            பொற்பரர் சுரர் பணிய அற்புதமாக
            அற்புதமாக, ஆதி அற்புதமாக - ஏதும்

4.         ஆயர்கள் கூட உயர் ஞானிகள் தேட - யூத
            ராயனென்ற தாலே ஏரோதேயுமே வாட
            ஏரோதேயுமே வாட, ஏரோதேயுமே - ஏதும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு