ரட்சகர் பட்சம் எனக்கிருந்தால்
29. செஞ்சுருட்டி ஆதி
தாளம்
பல்லவி
ரட்சகர்
பட்சம் எனக்கிருந்தால்
நிச்சயம் தீமை பறந்திடுமே
அனுபல்லவி
எச்சாதியோருக்கும் ரட்சாபெருமானாய்
இந்நிலம் தன்னில் மனுவாகத் தோன்றின
1. ஆரணியந்தனியில் தீயலகை யாருண்டு வெருண்டோடச்
செய்தனரே
மாறத பூரண வல்லமையுள்ள மெய்யான பராபர வஸ்துமகவான
2. ஐந்தப்பம் கொண்டு ஐயாயிரம்பேர்
அன்று போஷிக்கப்பட்டனரே
சிந்தை கலங்கித் தியங்காதே மனமே
தேவசுதனுனைப் போஷிப்பார் தினமே - ரட்சகர்
3. வேலையலை மிஞ்சி மோதிடவே வீசிய காற்றை யமர்த்தினரே
பேலியாள் மக்கள் பெருத்ததினால் வரும் பீடைகள்
துன்பங்கள் யாவுமே போக்குவார்
Comments
Post a Comment