வழி நடத்த வாரும்
இயேசுவே வழி நடத்த வாரும்
- 2
வழி நடத்த வாரும்
மேய்ப்பரே வழி நடத்த வாரும்
- 2
பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில்
மூழ்கினோமே - 2
எமது படகைச்
செலுத்தி
அன்புக் கரையில்
சேர்க்க வாரும் - 2 - வழி நடத்த
1. ஐம்புல
ஆசைகளால் தினமும்
அடிமையாகிப் போனோம் - 2
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித்
தாரும் - 2 - வழி நடத்த
2. சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும் - 2
உமது சுகம் தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடையவேண்டும்
- 2 - வழி நடத்த
No comments:
Post a Comment