23 December 2025

வாருங்கள் போவோம் கொல்கொதா

வாருங்கள் போவோம் கொல்கொதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாருங்கள் போவோம் கொல்கொதா

                        பாருங்கள் உள்ளம் கறையாதா

                        முள்முடி வேந்தன் நம் இயேசுவே

                        மூன்றாணியில் மாண்டனரே

 

1.         உழுத நிலமாய் உத்தமர் இயேசு

            உன் பாவ பலியாய் தன்னையே ஈந்தார்

            அழவும் இல்லை சபிக்கவும் இல்லை

            அந்தக் கேடடைந்தார் உந்தனுக்காய்

 

2.         மூன்றாணியாலும் முள் முடியாலும்

            மூர்க்கன் அடித்த கசையடியாலும்

            தண்ணீராக வடிந்த இரத்தம்

            தரணியோர் பாவம் கழுவியதே

 

3.         நெருப்பில் வீழ்ந்த நீர் துளி போல

            நீ செய்த பாவம் மறைந்திடுமே

            வெறுத்து நீ விரும்பி வந்தால்

            விண்தூதர் காவல் உனக்களிப்பார்

 

4.         பச்சை மரத்திற்கே இந்த பாடானால்

            பட்ட மரம் நீ என்ன ஆவாய்

            இச்சை வெறுத்து உலகில் வாழ்ந்தால்

            நிச்சயம் மோட்சம் உனக்களிப்பார்

 

5.         பாரச் சிலாவை சுமந்ததாலே

            பங்கமடைந்து பெலனிழந்தாரே

            கோரமான துன்பத்திலும்

            கொலைஞருக்காய் பரிதபித்தார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...