31 December 2025

புதியதோர் ஆண்டு கர்த்தரின் ஈவு

புதியதோர் ஆண்டு கர்த்தரின் ஈவு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதியதோர் ஆண்டு கர்த்தரின் ஈவு

            வந்ததே இன்று நன்மைகள் தந்து - 2

            நாம் பண் பாடுவோம்

            கொண்டாடுவோம் ஏசுவிலே - 2

 

                        நன்றி சொல்லுவோம் ஏசு நாதருக்கு

                        ஆண்டுகள் தோறும் நம்மை நடத்தி வருவதால் - புதியதோர்

 

1.         வருடங்கள் எல்லாமே கர்த்தரின் கரங்களிலே

            மழை துளியாய் குவிந்திருக்குதே

            அதை நம்மேல் பொழிந்ந்திடவே

            கற்பனை ஐந்தினையே கைக்கொண்டு நடந்திடுவோமே

 

                        விலகாதே அவர் கிருபை ஒரு நாளும் - (2)

                        தாங்குவார் ஏந்துவார் தப்புவிப்பார் இந்த ஆண்டும் - (2) - நன்றி

 

2.         கர்த்தரின் வாக்குகள் பனி போல பெய்திடுதே

            இனிதினிதாய் இந்நாளிலே

            மாறாது அவர் கிருபை மறையாது அவர் வார்த்தை

            இன்றும் என்றும் நம் வாழ்விலே

 

                        இம்மானுவேலன் அவர் நம்மோடுண்டு - (2)

                        இதுவரை காத்தவர் இனிமேலும் நடத்துவார் அஞ்சிடாதே - (2) - புதியதோர்

 

 

- Sherwin Joshua

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...