ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி
முடியாத அற்புதங்களும் - 2
நிறைவேறும்
காலம் வந்துவிட்டது
நிச்சயமாய்
உன் கண்கள் பார்க்கப்போகுது - 2
இப்பதான்
ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான்
ஆரம்பமே எல்லாமே அற்புதமே
1. வெட்கப்பட்டு
தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம்
தாமதங்கள் ஆனாலும் - 2
வானம்
பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே
உன்னில்
துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே - இப்பதான்
2. முயற்சி
எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம்
கண்ணீர்விட்டு அழுதாலும் - 2
காலை
வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள்
எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே - இப்பதான்
புது
கிருபை இறங்கியே
புது
பெலத்தால் மூடுதே
புது
வழிகள் திறக்குதே
இந்நேரம் வந்ததே - 4 - இப்பதான்
- Rev. Alwin Thomas
No comments:
Post a Comment