19 December 2025

இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்

இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்

            சருவத்தை ஆளுகின்ற சருவதிகாரா!

 

                        நிகர் ஏதும் இல்லாத ஒரே ஒரு தேவனாம்

                        சருவத்தை ஆளுகின்ற கிறிஸ்தேசு ராஜா! - 2

 

1.         உடன்படிக்கை நினைத்து தம் ஜனத்தை விடுவித்த

            உன்னத ஆதி தேவா யேகோவா! - 2

 

            வனாந்திரத்தில் நடத்தி மன்னாவால் போஷித்து - (2)

            சமுகம் முன்செல்லும் என்று வாக்குறுதி அளித்தார் - (2) - இணை

 

2.         மண்ணுயிர் மீட்கவே மனிதனாய் பிறந்த

            மன்னரின் மன்னவா மாதேவா! - 2

 

            மன்னிப்பும் மீட்பும் நித்திய வாழ்வும் - (2)

            நிச்சயம் என்று கூறி நம்பிக்கை அளித்தார் - (2) - நிகர்

 

3.         ஆவியில் அனல் மூட்டி அச்சாரமாக நிற்கும்

            பரிசுத்த ஆவி தேவா துணையாளா! - 2

 

            சத்தியத்தில் நடத்தி வாக்கினால் போஷித்து - (2)

            என்றும் நம்முடன் என்று வாக்குறுதி அளித்தார் - (2) - இணை

 

 

- Mosus Jorden & Anitta

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...