11 December 2025

விண்ணுலக தேவன் மண்ணுலகம் வந்தார்

விண்ணுலக தேவன் மண்ணுலகம் வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணுலக தேவன் மண்ணுலகம் வந்தார்

            பூமியில் சமாதானம் தரப் பிறந்தார்

 

                        தூதர்கள் பாடிட, மேய்ப்பர்கள் போற்றிட

                        இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் - 2

 

            இயேசு அதிசயமானவர் இவர்தானே!

            இயேசு ஆலோசனைக் கர்த்தர் இவர்தானே! - 2

 

                        கர்த்தாதி கர்த்தரும், வல்லமை தேவனும்,

                        நித்திய பிதாவும் இவர்தானே! - 2 - விண்ணுலக

 

1.         தீர்க்கன் முன்னுரைத்த வாக்குப்படி

            இயேசு பாலகனாய் பிறந்துவிட்டார்

            இம்மானுவேலர் நம்மோடிருக்க

            நம் பாவங்களை போக்கிவிட்டார் - 2

 

                        பாவங்கள் போக்கினார், சாபங்கள் நீக்கினார்,

                        இரட்சிப்பின் சந்தோஷம் நமக்கு தந்தார் - 2 - விண்ணுலக

 

2.         அன்று மேய்ப்பர்கள் மந்தையை காத்திருக்க

            தூத சேனைகளெல்லாம் வாழ்த்திப் பாடிட

            இயேசு இரட்சகராய் பிறந்துவிட்டார்,

            நம் சாபங்களை நீக்கிவிட்டார் - 2

 

                        தாவீதின் ஊரிலே பெத்லகேமிலே

                        நமக்காய் இயேசு அவதரித்தார் - 2 - விண்ணுலக

 

3.         விண்மீன்கள் வழி நடத்திடவே

            வான சாஸ்திரிகள் பின்தொடர்ந்திடவே

            தேவகுமாரன் இயேசு பிறந்துவிட்டார்,

            நம் நோய்களெல்லாம் சுகமாக்கிவிட்டார்

 

                        இரட்சகர் பிறந்திட்டார், இரட்சிப்பை தந்திட்டார்,

                        உன்னத அருணோதயம் உதித்துவிட்டார் - 2 - விண்ணுலக

 

 

- Pr. Edwin Sudhakar (Church Of God Full Gospel in India)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...