453. இராகம்: காமாசு ஆதி
தாளம்
பல்லவி
வா, வா, நேசா மலர் சுவிசேஷத்தின்
மது தனையுண்டிடவே!
அனுபல்லவி
தேவாமிர்தமாம்
ஜீவனைக் கண்டிட
சாவாமிர்தமாம்
சாமியை அண்டிட - வா
சரணங்கள்
1. ஜீவ போஜனம் ஜீவ நீரதும்
தினமும் சுரந்திடவே
தினமும் பார்த்திட தினமும் கேட்டிட சிந்தைவரும் திடமே
பாவ மனைத்தையும்
பாடுடனழித்திடும்;
ஓவா[1] மகிழ்ச்சியை
உளமதிலளித்திடும் - வா
2. யேசு நாமம் தெங்குங்குலவுமோ இன்பம் அளித்திடுமே
இனிய மறையது
இடமே தேடிடில் இதயம் விழித்திடுமே
பேசிடும் பேயெல்லாம்
பெயர்ந்திட ஓடிடும்;
வீசிடும் ஒளியதை
வீறுடன் நீட்டிடும்.
No comments:
Post a Comment