17 December 2025

ஏசாயா தீர்க்கன் ஓரு நாள் தரிசனம் கண்டான்

ஏசாயா தீர்க்கன் ஓரு நாள் தரிசனம் கண்டான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஏசாயா தீர்க்கன் ஓரு நாள் தரிசனம் கண்டான்

                        தேவமைந்தன் கன்னிமரியின் மடியில் தோன்றுவார் - 2

 

1.         கடுங்குளிரில் மேய்ப்பர் மந்தை காத்து நிற்கையில்

            தேவதூதர் வானில் தோன்றி வாழ்த்துக் கூறினார் - 2

            எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோசம் தரும்

            நற்செய்தியை கூற இங்கு வந்து நின்றாரே - 2 - ஏசாயா

 

2.         தாவீதின் குமாரன் இயேசு பெத்லகேமிலே

            மாட்டுத் தொழுவில் ஏழ்மையாக அவதரித்தாரே - 2

            கர்த்தராகிய கிறிஸ்து உலக இரட்சகர்

            பாலனாக உன்னில் தோன்ற இடம் தருவாயா? - 2 - ஏசாயா

 

3.         பாவத்திலே மாண்டு போகும் மண்ணின் மைந்தர்க்காய்

            விண்ணின் வேந்தன் தன்னை இன்று உலகில் தந்தாரே - 2

            சிலுவை மரத்திலே மரித்து ஜீவன் ஈந்தாரே

            உயிர்த்தெழுந்த இயேசுவை நீ இன்றே ஏற்றுக்கொள் - 2 - ஏசாயா

 

 

- Prince Wilson, Nazareth

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...