16 December 2025

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

163. இராகம்: கமாசு                                       அடதாளசாப்பு

 

                             பல்லவி

 

          வா; பாவி கர்த்தரின் அண்டைக்கு வா,

 

                             சரணங்கள்

 

1.         பாவியே, இன்னும் பயமின்றிப் பாவத்தில்

            நிலைத்திருக்காதே; இப்போ

            தாவியே ஜோதியருன்னை அழைக்கிறார்

            தாமதஞ் செய்யாதே - வா

 

2.         பாவநாசர் உனக்கென்று சிந்தின

            ரத்தம் அதோ பாராய்?-உல

            காசையை விட்டகன் றேசுவின்

            பந்தியில் இக்ஷணமே சேராய்? - வா

 

3.         ஆபத்துக்குந்த தேவ கோபத்துக்குந்

            தப்பத் தீவிரமாயோடி வா;-உன்

            பாவத்தின் சாபத்தை நீக்க வந்த

            பரிசுத்தரின் அண்டைக்கு வா - வா

 

4.         காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால்

            இனி யெப்போ குணப்படுவாய்?-நீ

            ஜாலம் பண்ணித் தேவ சாபத்தை

            தேடாமல் இப்போ குணப்படுவாய் - வா

 

 

- அருளானந்தம் பிரசங்கியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...