வாழ்க
வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்க இயேசுவில் வாழ்கவே
1. கையின் பிரயாசங்கள் வாய்க்கவே
களஞ்சியம் நிரம்பி வழியவே - 2
குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - 2 - வாழ்க
2. கூடையும் மா பிசையும் தொட்டியும்
கையிடும் வேலையும் வாழ்கவே - 2
போக்கிலும் வரத்திலும் மேன்மையே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - 2 - வாழ்க
3. பொழிந்திடும் மழையும் காலத்தில்
விளைந்திடும் நிலமும் வேளையில் - 2
ஜெபத்துடன் முயற்சியும் ஓங்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே - 2 - வாழ்க
4. வீட்டோரம் திராட்சை செடி போல
மனைவியும் கனி தந்து விளங்குவாள் - 2
பிள்ளைகள் ஒலிவக் கன்று போல்
இயேசுவின் என்றென்றும் வாழ்கவே - 2 - வாழ்க
No comments:
Post a Comment