29 December 2025

வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும்

வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும்

                        தேவனின் கிருபையோ முடிவதில்லையே

                        நாட்கள் துவங்கி நாட்கள் மறையும்

                        தேவனின் தயவோ மறைவதில்லையே

 

1.         தாழ்வில் உள்ளவன் மேல் கிருபை அளிக்கும் தெய்வம்

            தாழ்வில் இருந்த நம்மை நினைத்தருளினாரே - 2

            எத்தனை நெருக்கம் எத்தனை போராட்டம்

            அனைத்தையும் தாங்கும் பெலனை தந்தாரே

 

2.         சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தெய்வம்

            சோர்ந்து போன நம்மை சூழ்ந்து கொண்டாரே - 2

            எத்தனை இழப்பு எத்தனை ஏமாற்றம் - (2)

            அனைத்தையும் தாங்கும் பெலனை தந்தாரே - (2) - வருடங்கள்

 

                        நன்றி தகப்பனே நன்றி இயேசுவே - (2)

 

                        பாதுகாத்தீரே நன்றி

                        வழி நடத்தின கிருபைக்காய் நன்றி

                        உயர்த்தி வைத்தீரே நன்றி

                        தோளில் சுமந்து வந்தீரே நன்றி - 4

 

                        நல்லவர் நீர்தானையா - (4)

                        ரொம்ப ரொம்ப நல்லவரையா - (4)

 

 

- PAS. JOHNSON

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...