மறவாமலே எனை நினைத்தீர்
என் நேசரே
உமக்கு ஆராதனை
இதுவரையில்
உதவினீரே
எபினேசரே
உமக்கு ஆராதனை - 2
என்
செல்வம் நீரே
என்
சுகமும் நீரே
என்
பெலனும் நீரே
என்
உலகம் நீரே - 2
1. தாயின்
கருவில் உருவாகும் முன்னே
பேர் சொல்லி
அழைத்தீர் உமக்காகவே - 2 - என் செல்வம்
2. தகப்பனாய்
தோளில் கரங்களில் தூக்கினீர்
தவறிய
நேரத்தில் விடவில்லையே - 2 - என் செல்வம்
3. பிள்ளையாய்
வாழ
சிலுவையை
சுமந்தீர்
சித்தம்
செய்து முடிப்பேன் உமக்காகவே - 2 - என் செல்வம்
- Rev. A. Ebenezer
No comments:
Post a Comment