வாக்குரைத்தவர்
நீர்தான்
வாழ்வளிப்பவர் நீர்தான்- என்றும்
மாறாத
நல்கர்த்தர் நீர்- என்னை
நடத்திடும்
நல்மேய்ப்பர் நீர்
வருஷத்தை நன்மையால் முடி சூட்டுவீர்
வாக்குத்...தத்தம்
நிறைவேற நடத்திடுவீர் - 2 - வாக்குரைத்தவர்
1. ஆயிரம்
பதினாயிரம் - பேரில்
சிறந்தவர்
பெரியவர் நீர்
என்னை
ஆசீர்வதிப்பதிலே மிக
உயர்ந்தவர்
உன்னதரே - 2 - வருஷத்தை
2. அடைத்த
கதவுகளை உடைத்து
நடந்திட
உதவி செய்வீர்
வானத்தின்
பலகணியால் என்
பாத்திரம்
நிரம்ப செய்வீர் - 2 - வருஷத்தை
3. வெட்கப்பட்ட
இடங்களிலே
என் தலையை
உயர்த்திடுவீர்
இரட்சண்ய
பாடல்களால்
உம்மை
உயர்த்திட உதவி செய்வீர் - 2 - வருஷத்தை
- M. RAJA AND PASTOR. R. DANIEL
No comments:
Post a Comment