வாக்குத்தத்தம்
ஆயிரம் ஆயிரம்
வழங்கிய வள்ளலே ஸ்தோத்திரம்
வாக்கு மாறா வல்ல தேவன் இயேசுவே
வலக்கரம் பிடித்தீர் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
1. விலகுவதில்லை கைவிடுவதில்லை
உன்னோடு இருப்பேன் என்றீரே ஸ்தோத்திரம்
உலகமே முடிந்து போயினும்
நீரோ
என்றென்றும் என்னுடன் ஆமென் ஸ்தோத்திரம்
2. வாய்க்காதே போகும் எந்த ஆயுதமும்
உன்னைக் காத்திடுவேன் என்றீரே ஸ்தோத்திரம்
ஒரு வழி வந்து ஏழு வழி ஓடிட
யுத்தம் செய்யும் இயேசுவே ஆமென் ஸ்தோத்திரம்
3. வல்ல நம் கிருபைகள் நல்ல காருண்யங்கள்
அள்ளித் தந்தீர் தேவனே என்றும் ஸ்தோத்திரம்
இத்தனை அன்பு என் மீது வைத்தீர்
என்றென்றும் தொழுவேன் ஆமென் ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment