12 December 2025

விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே

விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணுலகம் போற்றும் எந்தன் மன்னன் இயேசுவே

            மண்ணுலகம் வந்துதித்தார் எந்தன் சிலாக்கியமே - 2

 

            ஏழை குடில் மாறவே

            வறுமை வியாதி நீங்கவே

            பூவுலகில் வந்துதித்தார் எங்கள் தேவபாலனே - 2

 

                             பல்லவி

 

                        போற்றிப் பாடிடு உயர்த்தி மகிழ்ந்திடு

                        விண்ணைவிட்டு மண்ணில் வந்தார் என்று சொல்லிடு - 2

 

                        துரோகம் செய்து தூரம் வாழ்ந்த இந்த துரோகியை

                        மீட்டிடவே அவதரித்தார் இந்த உலகிலே - 2 - விண்ணுலகம்

 

                             சரணம்

 

1.         இம்மானுவேலர் தேவன் நம்மோடு

            என்றும் வாழ்வதால் கவலை இல்லையே - 2

 

            பாவங்கள் சாபங்கள் இனி என்றும் இல்லையே

            பரலோக மகிமையே என் சொந்தமானது

            உளம்மானந்த கீதங்களால் பாடுதே - (2) - போற்றிப்

 

2.         வார்த்தையானவர் வல்லமை உள்ளவர்

            ஆயிரம் பதினாயிரகளில் என்றும் சிறந்தவர் - 2

 

            உள்ளங்கள் நிரம்பிட மறுரூபம் அடைந்திட

            உன்னத ஆவியால் புது பெலன் பெற்றிட

            என்னை அன்பாலே ஆளும் என் மணவாளனே - (2) - போற்றிப்

 

 

- Pas. J. John Israel

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...