26 December 2025

வாரும் மனந்திரும்பி வாரும் கிறிஸ்துவிடம்

வாரும் மனந்திரும்பி வாரும் கிறிஸ்துவிடம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

164. இராகம்: உசேனி                                     ஆதிதாளம் (427)

 

                             பல்லவி

 

          வாரும், மனந்திரும்பி வாரும்; கிறிஸ்துவிடம்

            சேரும்; திடமுடனே சேரும்.

 

                             அனுபல்லவி

 

            ஆரும் வரலாம், நித்திய பேறும் பெறலாம்; வந்தோர்

            ஆரையும் தள்ளிவிட்டார்; தாராளமா யெளியோர், - வா

 

                             சரணங்கள்

 

1.         தெருக்கடோறு மலைந்த[1] தீயர்க்கு மிடமுண்டு;

            சிதறி வேலி கடோறும் திரிந்தோரையும் பண்டு

            உருக்கமுட னழைத்த திருக்கருணையுங் கண்டு

            உள்ளநோய் துயரோடு மெள்ளத் தள்ளாடிக் கொண்டு - வா

 

2.         தாழ்வோடழுது தியங்கும் நிர்ப்பந்தமும்

            தம்பவச் சேனையால் தத்தளித்தோர் ஆரும்,

            நாளும் வருங் கோபாக்கினைக்கு வெருவினோரும்[2],

            நானே பாவியென்றோரும் நடுநடுங்கின பேரும்; - வா

 

3.         பதினோராம் தாசில்[3] வந்தாலும் உதறித் தள்ளார்

            பரிதாபம் அன்பிரக்கம் திரு உள்ளத்திலுள்ளார்;

            கதித்த மோட்சத்திற் பங்கு கள்ளனுக் கீந்த நல்லார்

            கனிந்து வருவோர் தம்மைச் சினந்து நில்லென்று சொல்லார் - வா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மயங்கிய

[2] அஞ்சினோர்

[3] வேளை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...