26 December 2025

வாரும் தூய ஆவியே வந்தென்னில்

வாரும் தூய ஆவியே வந்தென்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாரும் தூய ஆவியே

                        வந்தென்னில் வாசம் செய்யும்

                        வல்லமையால் என்னை நிரப்பிடும்

                        இயேசுவின் பிள்ளையாய் வாழச் செய்யும்

                        ஆமென் அல்லேலூயா

 

1.         கசப்பு வெறுப்பு வேதனைகள்

            என் உள்ளத்தில் வேண்டாம் எடுத்திடும்

            மனதார மன்னிக்க பெலன் தாரும்

            மன்னித்து மறக்க கற்றுத் தாரும்

 

2.         வஞ்சகம் நிறைந்த உலகிலே

            வாஞ்சிக்கிறேன் உம் அன்புக்காய்

            வற்றாத நீரூற்று நீர் தானய்யா

            வந்திட்டேன் கலைமான் குட்டி ஐயா

 

3.         துன்ப துயர நேரங்களில்

            துணையாளரே நீர் போதும் ஐயா

            தனிமை என்னை வாட்டுதய்யா

            தாங்கிடும் நண்பனாய் வாருமய்யா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...