24 December 2025

ஜெனித்தார் ஜெனித்தார் இயேசு ராஜன்

ஜெனித்தார் ஜெனித்தார் இயேசு ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெனித்தார் ஜெனித்தார்

                        இயேசு ராஜன் மானிடனாய் ஜெனித்தார் - 2

 

1.         விண்ணை விட்டு தேவபாலன் அன்னை மரியிடம்

            மண்ணுலகில் புல்லணையின் மீது பிறந்தார்

            ஏழ்மையின் கோலமாய் மனுவேலன்

            பெத்லகேமில் பாலனாக அவதரித்தாரே

            ஆ! ஜெனித்தாரே என்ன விந்தையாய் - ஜெனித்தார்

 

2.         நல்லதோர் செய்தியாம் பாரில் யாவர்க்கும்

            வல்லதோர் மீட்பரே தோன்றினாரே

            எல்லையில்லா சந்தோஷ செய்தியை

            வானில் தூதர் கூடி ஒன்றாய் ஆர்ப்பரித்தாரே

            ஆ! எந்தனுக்கு என்ன ஆனந்தம் - ஜெனித்தார்

 

3.         பாவத்தைப் போக்கிடவே பலியாக வந்த

            எல்லாம் நிறைந்தவர் ஏதும் மற்றோரானாரே

            ஆதரவற்றோராய் பிறந்தார்

            எந்தனையே மீட்டிடவே இப்புவி வந்தார்

            ஆ! என்ன அன்பு எந்தன் மீதிலே - ஜெனித்தார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...