165. இராகம்: தோடி ரூபகதாளம் (428)
பல்லவி
வாரும், வாரும்; என தடி-வந்து சேரும்
அனுபல்லவி
ஆரானாலும் துர்ப்பாவியன் ஆயினும்
அச்சம் இல்லாமலே, இக்ஷண
மேவியே - வாரும்
சரணங்கள்
1. பாரம் சுமந்து தவிப்பவரே,-கன-பாடுகள்
நிறைந்திருப்பவரே
ஆறுதல், தேறுதல் அளிக்கிறேன், என்று
அன்புடன் சொல்ல யான், பின்னும் தடை ஏது?
- வாரும்
2. தாகம் மிகுந்தவரே, வாரும்; பதில்-தரவும் பணம்
இன்றி வாரும்;
தாகம் தீர்த்துக் கொள்ளும் தடை இல்லாமலே
சந்தோஷமே பெற
இந்தத் தருணமே - வாரும்
3. தீவி[1]திராட்சரசமும்
கொளும்-மிக-திருப்திசெய்யும் அமுதும்
கோளும்
தாவீதின் நிச்சயக்கிருபை
யாவையும்
சந்தத உடன்
படிக்கையே செய்வோம் - வாரும்
4. ஜெபதபத்தோடு சேரவாரும்-வெகு-திடநம்பிக்கையோ டேகிவாரும்
உவமை ஏதும் இலாத
தயாள நல்
உருக்க மேவிய கிறிஸ்து ஏசு நான் - வாரும்
- ஈசாக்கு ஞானமுத்து
No comments:
Post a Comment