ஒரே ஒரு விண்ணப்பந்தான்
அதுவே
எனது ஏக்கமைய்யா - 2
உமது
வழியில் ஒவ்வொரு நாளும்
உமது
சமூகத்தில் ஒவ்வொரு வேளையும்
நடத்திச்
செல்லுமைய்யா - இயேசைய்யா
நடத்திச்
செல்லுமைய்யா - ஒரே ஒரு
1. உமது சிறகுகள்
என்னைக் காக்கும்
உமது இறக்கைகளின் புகழிடம் தாண்டி
தீமை என்னை
அணுகாது
வாதை என்
கூடாரத்தை நெருங்காது
ஏனெனில்
எனது உறைவிடம் நீர்
ஏனெனில்
எனது புகலிடம் நீர் - ஒரே ஒரு
2. எனது பாறையும்
அரணும் நீரே
எனது மேய்ப்பரும்
நேசரும் நீரே
தேடிவந்தென்னை மீட்பவர் நீரே
பேரைச்
சொல்லி அழைத்தவர் நீரே
ஏனெனில்
எனது மீட்பரும் நீரே
ஏனெனில்
எனது வெளிச்சமும் நீர் - ஒரே ஒரு
- Fr. Michael Mariadoss
No comments:
Post a Comment