240.
இராகம்: கமாசு ஆதிதாளம்
பல்லவி
வாருமே வழி காட்டுமே-யேசு, வறியன் என் கலி ஓட்டுமே.
சரணங்கள்
1. சீரில்லான் மிகப் பாடுள்ளோன்; சிறியன் யான், துயர் நீடியே,
பாரினில்
பலவீனனாயினன்; பண்புடன் தயை யீயவே - வாருமே
2. இந்த
லோகம் மிகுந்த கேடுதான்; இங்கிருப்பது பாடுதான்;
வந்து
ஞான காரந் தந்தெனை வழி நடத்தியே
காத்திட - வாருமே
3. ஜீவ
நீரது சுரக்கும் ஊற்றினைத் திறந்து
தாகத் தீரையா;
தீபமேக ஸ்தம்பங் காட்டியே, செல்வழியில் நடத்தையா - வாருமே
4. சாவின் அந்தகாரம் வந்தெனை சாலவுந் திகிலாக்கையில்,
மேவியேயருள் வெற்றி தந்தென்னை விண்
கதியினில் ஏற்றவே - வாருமே
- ப.ஈ.
யோவான்
No comments:
Post a Comment