நன்றி சொல்லி பாடுவேன் நன்மை செய்த கர்த்தரை
நாள்தோறும்
அவர் புகழை பாடுவேன் - 2
நலமுடனே காத்திட்டார் நன்மைகளை தந்திட்டார்
நன்றி நிறைந்த இதயத்தோடு பாடி மகிழுவேன்
- 2
1. வியாதிகள்
வருத்தங்கள் சோர்வுகள் சங்கடங்கள்
எல்லாம்
என்னை நெருக்கின போது
எப்படி
நான் எழும்பிடுவேன்
என்ன நான்
செய்திடுவேன்
என்று
நான் கலங்கின நேரம் - 2
கலங்காதே
திகையாதே
நான்
உன்னோடு உண்டு
எந்தன்
இயேசு சொன்ன
சத்தம்
கேட்டு அமைதியாகினேன் - 2 - நன்றி
2. ஆபத்துகள்
விபத்துகள் ஏமாற்றங்கள் தோல்விகள்
எல்லாம்
என்னை சூழ்ந்திட்ட போது
எப்படி
நான் தப்பி செல்வேன்
யார் எனக்கு
உதவி செய்வார்
என்று
நான் அழுதிட்ட நேரம் - 2
மகனே
நீ அழ வேண்டாம்
நான் உன்னோடு உண்டு
எந்தன்
இயேசு சொன்ன
சத்தம்
கேட்டு சந்தோசமாகினேன் - 2 - நன்றி
- Idilin Baby Singh
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment