புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்
நித்தம்
நிதம் வாழ்வில் காருண்யம் சொரிவார் - 2
இம்மானுவேலர் எபிநேச கர்த்தர்
இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார் - 2
1. தேவைகள்
யாவையும் நிறைவாக சந்திப்பார்
பாரங்கள்
சுமைகள் கடனெல்லாம் தீர்த்திடுவார்
- 2
நடைகள்
வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார்
விண்ணப்ப
ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் - 2 - புத்தம் புது
2. நோய்கள்
நீக்கி புதுபெலன் ஈந்திடுவார்
உற்சாகத்தோடு
உழைத்திட செய்திடுவார் - 2
அயராது
தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார்
கண்மணி
போல் என்னை கருத்தாக காத்திடுவார் - 2 - புத்தம் புது
3. ஒவ்வொரு
நாளும் புது வழி திறந்திடுவார்
ஓயாமல்
துதித்து மகிழ்ந்திட செய்திடுவார் - 2
புஷ்டியும்
பசுமையும் குறையாமல் நடத்திடுவார்
நன்மையும்
கிருபையும் தொடர்ந்திட செய்திடுவார் - 2 - புத்தம் புது
- Bro. Stephen
No comments:
Post a Comment