26 December 2025

வாலிபரே கன்னியரே வாருங்கள்

வாலிபரே கன்னியரே வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாலிபரே கன்னியரே வாருங்கள்

            கர்த்தர் இயேசு சித்தம் செய்ய வாருங்கள் - 2

 

                        காலம் இனி செல்லாது

                        காணும் இன்பம் நில்லாது

                        கர்த்தர் வரும் வேளை தப்பாது - வாலிபரே

 

1.         இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் அறிவிக்க வேணும்

            இராப் பகலா கண் விழித்து ஜெபித்திட வேணும் - 2

            இராக் காலம் வருமுன்னே அவர் வேலை முடிக்கணும் - (2)

            சத்தியத்தை உலகம் அறியனும்

            அதுக்கு அவரிடம் உன்னைக் கொடுக்கணும் - வாலிபரே

 

2.         தேசமெங்கும் நம் கால்கள் அலைந்திட வேணும்

            தேடித் தேடி மனிதர்களை மீட்டிட வேணும் - 2

            பொல்லாத சாத்தானின் வல்லமையை ஒடுக்கணும் - (2)

            நல்வாழ்வு மனிதர் அடையனும்

            அதுக்கு அவரிடம் உன்னைக் கொடுக்கனும் - வாலிபரே

 

3.         கடைசிகால அபிஷேகம் பெற்றிட வேணும்

            வரங்களாலே வாழ்க்கையெல்லாம் நிரம்பிட வேணும் - 2

            கர்த்தரே தேவன் என்று உலகெங்கும் முழங்கணும் - (2)

            சத்துருவை ஜெயித்து துரத்தணும்

            அதுக்கு அவரிடம் உன்னைக் கொடுக்கணும் - வாலிபரே

 

 

- Vincent Selva Kumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...