74. இராகம்: இந்துஸ்தான் டப்பா ஏகதாளம்
தரு
1. வாரீர் பாடுற்றோரே வந்தென் - மார்பினில் சார்வீரே உங்கள்
வருத்தந்
தீர்ப்பேனென் றேசு வாக்களிக்கக் கேட்டே - வாரீர்
2. மாசுகளோடுயான்-செல்ல-வந்ததே
சந்தோஷம்! நித்திய
மாட்சிமையா
யிளைப்பாற மறைவிடமும் பெற்றேன் - வாரீர்
3. தாகிப்போரே ஜீவ-புனல்-தாழ்ந்து குடிவாரும், அதைத்
தாறேன் சும்மாவென யேசு தாற்றியது கேட்டே, - வாரீர்
4. ஏசுவாம் நல்ஜீவ-ஊற்றில் இன்புறவே பருகித்-தாகம்
ஏகிப் பரவசமாகி இருக்கிறேன் அவருள் - வாரீர்
5. இரு ளாருலகில்
நானே எரியும் வெளிச்சம்,-அதால்
இலகுஞ்[1] ஜீவியமென ஏசுரைக்கக் கேட்டே - வாரீர்
6. பார்த்தேன்; சூரியனும்-நீதிப்பரனுமவரென்றே-கண்டு
நேர்த்தியாம்
வெளிச்சத்தில் நாள் நீங்குமட்டும் நடப்பேன் - வாரீர்
- ஜி. ஜேம்ஸ்
No comments:
Post a Comment