அதிசயம் ஓர் அதிசயம்
மண்ணில்
அன்று நிகழ்ந்ததோர் அதிசயம் - 2
குழந்தை
வடிவில் கடவுள் வந்து பிறந்த அதிசயம்
மீட்பர்
இயேசு பெத்தலையில் பிறந்த அதிசயம் - 2
ஆடிப்
பாடிப் புகழ்வோம் ஆர்ப்பரித்து மகிழ்வோம் - (2)
மீட்பர்
பிறந்த நாளை கொண்டாடி களிப்போம் - (2)
(Hap. Hap. Hap.) Happy Christmas
(Mer. Mer. Mer.) Merry Christmas - 2
1. அன்பின்
வடிவம் கடவுள் என்று சொல்லிடவே
கள்ளமில்லா
குழந்தை உருவம் ஏற்றாரே - 2
நல் மனம்
கொண்ட மாந்தரில்
கடவுள்
மீண்டும் பிறக்கிறார் - 2
இதுதான்
கிறிஸ்மஸ் இதுதான் கிறிஸ்மஸ் - (2)
உற்சாக
வெள்ளம் ஊற்றெடுக்கும் கிறிஸ்மஸ் - (2) - ஆடிப் பாடிப்
2. கருணை வடிவில்
கடவுள் மண்ணில் வாழ்ந்ததால்
தந்தை
இறைவன் இரக்கம் புரிய வைத்தாரே - 2
அன்புச்
செயல்கள் நாம் செய்தால்
தெய்வம்
நம்மில் பிறக்கிறார் - 2
இதுதான்
கிறிஸ்மஸ் இதுதான் கிறிஸ்மஸ் - (2)
உற்சாக
வெள்ளம் ஊற்றெடுக்கும் கிறிஸ்மஸ் - (2) - ஆடிப் பாடிப்
- அருட்பணி. முனைவர்
பெ. குழந்தைசாமி
No comments:
Post a Comment