வாலிபனே உன் வாலிப வயதில்
சிருஷ்டி கர்த்தரை நினை.
வாலிபம் போய்விடும் வயோதிபமாகிடும்
காலமோ குறுகியது!
- வாலிபனே
1. பாசி படிந்த நிலத்தில் நடப்பது
வாலிபப் பருவத்திலே
நாம் எங்கே, எப்போது, எப்படி
விழுவோம்
என்பது தெரியாது - இங்கு
யாருக்கும் புரியாது! -
வாலிபனே
2. நாகரீகம் என்னும் பாழும்
உலகில்
நயந்து வாழ்பவனே
உன்னை உலகிற்கு ஒளியாக ஜீவிக்க
இன்று
இயேசு அழைக்கிறாரே-உன்னை
அன்புடன் அழைக்கிறாரே!
- வாலிபனே
3. காணாமற் போன ஆடாய் இன்று
உலகினில் வாழ்பவனே
உன்னை கிறிஸ்து இயேசு மந்தையிற்
சேர்க்க
அன்புடன் அழைக்கிறாரே-நீ
இன்றே வந்திடுவாய்! - வாலிபனே
No comments:
Post a Comment