24 December 2025

மகிமை மகிமை மகிமை உன்னதத்தில் மகிமை

மகிமை மகிமை மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிமை மகிமை மகிமை

                        உன்னதத்தில் மகிமை

                        பூமியிலே சமாதானம்

                        மனுஷர் மேலே பிரியம்

 

1.         எந்த மனிதனும் பிரகாசம் அடைந்திடவே

            உலகின் ஒளியாய் வந்தார்

            பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே

            கர்த்தர் இயேசு வந்தார் - 2

 

                        உன்னதத்தில் மகிமை

                        பூமியிலே சமாதானம்

                        மனிதர் மேலே பிரியம்

                        நல்க இயேசு வந்தார்

 

                        தேவரூபம் துறந்தார்

                        அடிமை ரூபம் எடுத்தார்

                        தம்மை வெறுமையாக்கி

                        நிரப்பும் வார்த்தையாய் வந்தார்

 

2.         இழந்ததை தேடிடவே இரட்சிப்பை தந்திடவே

            இயேசு உலகில் பிறந்தார்

            நமக்கு ஜீவன் தர பரிபூர்ண ஜீவன் பெற

            கர்த்தர் இயேசு வந்தார் - 2

 

                        தேவன் தந்த ஈவு

                        சொல்லி முடியா ஈவு

                        இரட்சிப்பு தந்திடும் ஈவு

                        வரங்கள் தந்திடும் ஈவு

 

                        கிருபை சத்தியம் நிறைந்தே

                        நமக்குள் வாசம் செய்வார்

                        நம்மோடென்றும் இருக்கும்

                        இம்மானுவேலே இயேசு - மகிமை

 

 

- Pr. S. Galeb Jeyakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...