வெள்ளி
ஒன்று
புது
வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றிடுதே
அது நல்ல செய்தி ஒன்று கூறிடுதே
- 2
யூதருக்கு ராஜா பிறந்தார்
என்று
யூகித்தார்
சாஸ்திரிகள் உண்மை அதே - (2)
1. தங்க கட்டிக் கொண்டு வரலாமா
தங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமா - 2
வாரும் வாரும் அதை தாரும்
தாரும்
மிக நல்ல பரிசு அதுவே - 2
மங்கா புகழ் மன்னவனையே
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்
- 2 - வெள்ளி ஒன்று
2. வெள்ளைப் போளம் கொண்டு வரலாமா
வெள்ளை உள்ளத்தோனைக்
கண்டு மகிழ்வோமா - 2
வாரும் வாரும் அதை தாரும்
தாரும்
மிக நல்ல பரிசு அதுவே - 2
மங்காப் புகழ் மன்னவனையே
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்
- 2 - வெள்ளி ஒன்று
3. தூபவர்க்கம் கொண்டு வரலாமா
தூய பாலனுக்கு பரிசாக தரலாமா - 2
வாரும் வாரும் அதை தாரும்
தாரும்
மிக நல்ல பரிசு அதுவே - 2
மங்காப் புகழ் மன்னவனையே
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்
- 2 - வெள்ளி ஒன்று
- K.I. Packianathan
No comments:
Post a Comment