வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்கு
மாறுமோ - 2
இல்லை
இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை
இல்லை ஒருநாளும் இல்லை - 2
வாக்கு மாறாதவர் - இயேசு
வாக்கு மாறாதவர்
1. வெள்ளம்
போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன்
மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை
எதிர்த்தாலும் - 2
இல்லை
இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை
இல்லை நான் நொறுங்குவதில்லை - 2
இயேசு
என்னோடு தான் - என்
இயேசு
என்னோடுதான்
2. காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம்
சூழ்ந்தாலுமே
தரிசனங்கள்
நிறைவேறிட
தாமதங்கள்
ஆனாலுமே - 2
இல்லை
இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை
இல்லை நான் கலங்குவதில்லை
இயேசு
ஜீவிக்கிறார் - என்
இயேசு
ஜீவிக்கிறார்
- Ps. Ranjith Jeba
No comments:
Post a Comment