286.
இராகம்: தோடி அடதாளம் (459)
பல்லவி
வாரும், திருக்
கண்ணாலே பாரும் பரிசுத்தாவி தாரும்,
திருச்
சபையைச் சேரும்; எம் ஏசு சுவாமி, வாரும்
அனுபல்லவி
சீரும் செயலுமுள்ள தேவ திருத்துவமே
தரிசித் தடி பணியும் பரிசுத்தமே,
கூறும்
கருணாகரமே, யூத
கோத்திரமே, மெய்ஞானப் பாத்திரமே,
சேரும்
சபை அறிவில் தேறும்படி உணர்த்தத்
திட்டமாய்
இவர்க்குப் போதகப்
பட்டம்
கட்ட இச்சமயம் வாரும் - வாரும்
சரணங்கள்
1. ஒன்றும்
அறியாப் பேதை, என்று உலகோர் சொன்ன
உத்தமர்
ஈராறு பேரை இத்தரையினில்
சென்றுபதேசம் செய்ய என்றும் அப்போஸ்தலராய்த்
தேற்றியே
ஆவியை அவர்க் கூற்றிய தேவா,
இன்றும்
அவர்போல் உமக் கென்றும் ஊழியம் செய்ய
இவரை,
உம் தாசனாகச் சபையினில் வைக்கவும்
- வாரும்
2. மந்தை
ஆடுகளும் மெலிந் திரை[1] நீரின்றி,
மலைகள்
காடுகளினில் அலையும் ஐயோ!
முந்த நரி கோனாய் நுழைந்து குட்டிகளையும்
முடுக்கி
எங்கும் சிதற அடிக்கும்; ஐயோ!
விந்தைப்புல் மீதோட்டி நிறைந்த தண்ணீரில்
காட்டி
மேய்க்க
உம்தாசனை ஞானமேய்ப்பனாக ஏற்படுத்த
- வாரும்
3. புத்தி,
மிகுந்த தேவபக்தி, பொறுமை, தயை
புனிதம்
ஜெபத்தியானம், பிறரில் அன்பு,
சத்யம், நீதி, இரக்கம், மெத்தவும் பவப்
பயம்,
தாழ்மை,
இச்சை அடக்கம், கீழ்மை அகற்றல்,
சுத்த
சற்குணம், இவை நித்தம் உன் தாசனிடம்
தோன்றச்
செய்து குருவாய் ஊன்றிவையும்
தயவாய் - வாரும்
- ஈசாக்கு பாக்கியநாதன்
No comments:
Post a Comment