வாலிபம் கலையும்
மேகமல்லவா
வாழ்க்கையோ மறையும் வேஷமல்லவா - 2
வருவாயா
இன்று இயேசு அழைக்கிறார்
தருவாயா
உன்னை அவரின் கைகளில்
1. உன்னை
வெல்ல மண்ணில் இன்று யாருமில்லையா
கண்கள்
காணும் காட்சியில் நீ காணும் இன்பமே - 2
மாயையல்லவா மாயையல்லவா
காண்பதெல்லாம்
மறையுமல்லவா - வாலிபம்
2. தீங்கு
நாட்கள் வருவதற்கு முன்னதாகவே
மாயை
என்று நீ உணர்ந்து இன்று வந்திடு - 2
தேவையல்லவா
தேவையல்லவா
இயேசு
உனக்கு போதுமல்லவா - வாலிபம்
3. அர்த்தமுள்ள வாழ்க்கை நீ வாழ வேண்டுமா
இயேசுவின்
பிள்ளையாய் நீ மாற வேண்டுமே - 2
மேன்மையல்லவா மேன்மையல்லவா
வாழ்க்கை
எல்லாம் மகிமையல்லவா - வாலிபம்
- Ravi Bharath
No comments:
Post a Comment