23 December 2025

வாருஞ்சபை யோரே வாரும் சுற்றி

வாருஞ்சபை யோரே வாரும் சுற்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

407. இராகம்: முகாரி.                                                                                                                தாளம்: ஆதி.

 

                    ஆரிவ ராராரோ” - என்ற மெட்டு.

 

                             பல்லவி

 

                   வாருஞ்சபை யோரே வாரும் - சுற்றி

                   வரிசையு டனே வாரும்

                        வாரும் இவ் வாலய வல இடப் பவனியில்

                        வானவ ரடி பணிந்து

 

                             சரணங்கள்

 

1.         சிற்சில ஆண்டாக - வெகு

            சிரத் தையுடன் முடித்தோம்

            பற்பல தீமைகள் வந்திடினும் அவை

            பனிபோ லகலக் கண்டோம் - வாருஞ்சபை

 

2.         அருளுத வியுமுற்றோம் - பெரியோர்

            பொருளுத வியும் பெற்றோம்

            கருணைக் கடல்நின் காவல் அனுதினமும்

            காத்திடவுங் கண்டோம் - வாருஞ்சபை

 

3.         இசரவேல் பாளயத்தின் - மீதில்

            இருந்த நல்லே கோவா

            நிசமதாய் இத்திரு ஆலயந் தங்குவார்

            நீடூழி காலமாக - வாருஞ்சபை

 

4.         ஞானிசா லோமோன்தான் - கட்டின

            நவ ரத்ன ஆலயத்தில்

            மானிடர் மகிழ்ந்திட வானவர் இறங்கிய

            வண்ணமிங் கருள்தங்க - வாருஞ்சபை

 

5.         பரம எருசா லேம் - நகரின்

            பாக்கியம் மரி பாலன்

            பாரதில் அவரது பளிங்கொளி வீசிட

            இரவும் பகல் போ லாம் - வாருஞ்சபை

 

6.         இகத்தில் நம் மோடுதங்கி - நமது

            இதயம் தம தாக்கி

            பரத்தில் என்றுநற் பாக்கியங் கொடுத்திடும்

            பரம னடி துதித்து - வாருஞ்சபை

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...