வாலிபர்
நம்மை அபிஷேகம் தந்து
அனுப்பிடும் தேவனை
வாழ்த்தியே பாடி வார்த்தையை ஏந்தி
புறப்படு நண்பனே
தடையொன்றும் இல்லையே
வானமே எல்லையே
தோல்வியே இல்லையே
ஜெயிப்பவர் நம்மிலே
1. உதடுகளின் பலி செலுத்தி
எரிகோவை தகர்த்திடலாம்
பாலும் தேனும் ஓடுகின்ற
வாழ்வினை பெற்றிடலாம்
கலங்கிடும் மானிடரின்
விலங்கினை ஒடித்திடலாம்
தேசத்தை சுற்றி வந்து
அதன் தேவையை சந்திக்கலாம்
2. முழங்காலை நிதம் முடக்கியே நாம்
பரமனை தரிசிக்கலாம்
வழியும் கண்ணீர் பலி செலுத்தி
அவர் துருத்தியை நிறைத்திடலாம்
திறப்பிலே நின்றிடலாம்
நம் தேசத்தை காத்திடலாம்
தீமையை வென்றிடலாம்
ஒளி தீபத்தை ஏற்றிடலாம்
3. சபைகள் நடுவே வல்லவரை
மகிழ்வுடன் துதித்திடலாம்
சாத்தானின்
கோட்டை அலங்கங்களை
நம் துதியால் தகர்த்திடலாம்
அன்பின் வழி நடந்து
வரும் துன்பத்தை வென்றிடலாம்
சத்திய பாதையிலே சென்று
நித்தியம் அடைந்திடலாம்
No comments:
Post a Comment