26 December 2025

புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்

புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்

                        கிருபையால் தேவன் தந்தது

                        புத்தம் புதிய வாழ்வு புத்தம் புதியநாள்

                        கிருபையால் தேவன் தந்தது

                        இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது

                        தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே

 

1.         கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்

            கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர் - 2

            இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்

            இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர் - புத்தம்

 

2.         வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே

            வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே - 2

            இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்

            இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர் - புத்தம்

 

3.         வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வனைந்தீரே

            வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே - 2

            இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்

            இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர் - புத்தம்

 

4.         புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே

            புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே- 2

            இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்

            இதுவரை போஷித்தீர் இனியும் போஷிப்பீர் - புத்தம்

 

                   புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்

                        இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது

                        தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே

 

 

 

- SELVIN SAMUEL

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...