வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம்
செய்தவர் வல்லமையுள்ளவர்
வாக்குத்தத்தம்
செய்தவர் மாறாதவர் - கொடுத்த
வாக்கை
இயேசு நிறைவேற்றுவார் - 2
1. மலைகள்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
என் கிருபை
உன்னை விட்டு விலகாதென்றார் - 2
என் கிருபை
உனக்கு போதுமென்றார்
நித்தம்
புது கிருபையால் நடத்திடுவார் - 2
2. நல்ல போராட்டத்தை
போராடு
விசுவாசத்தை
காத்துக்கொண்டு ஓட்டத்தை ஓடு - 2
நீதியின்
கிரீடம் உனக்கு உண்டு
நீதியுள்ள
கர்த்தர் அதை உனக்கு தருவார் - 2
3. உலகத்திலே
உனக்கு உபத்திரவம் உண்டு
ஆனாலும்
திடன்கொள் என்று சொன்னாரே - 2
ஜெயம்
எடுத்த தேவன் நமக்கு உண்டு
ஜெயம்
தந்து உன்னை நடத்திடுவார் - 2
No comments:
Post a Comment