ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்
நீங்கள்
விசுவாசித்தால் எல்லாம் கூடுமே - 2
கடுகளவு
விசுவாசம் இருந்தாலே போதும்
ஏங்குகின்ற
காரியங்கள் எல்லாமே ஆகும் - 2
சிரிச்ச
முகமாய் வருவாரு
சிறந்ததை
எல்லாமே தருவாரு - 2
1. யோபுவின்
வாழ்க்கையைப் போல
பல வித
(பல பல) கஷ்டங்கள் சூழ
சோராமல்
கர்த்தரை நீ பிடித்துக் கொண்டால் - 2
யோபுவின்
ஆசீர்வாதம் உனக்கு உண்டு
இழந்ததை
இரண்டு மடங்காய் பெற்றுக்கொண்டு
இனி
செழிப்பாக நீ வாழ்ந்திடு - கடுகளவு
2. குழந்தையின்
செல்வத்திற்காக
ஏங்கிடும்
சாராளாக
பல நாட்கள்
காத்திருந்து அழுகின்றாயோ - 2
ஆபிரகாமின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு
நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு -
2
உன் நம்பிக்கை வீண் போகாது - கடுகளவு
- Stella Ramola and Daniel Davidson
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment