வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும்
உம் கிருபையினால்
காலைதோறும்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும்
உம் கிருபையினால்
நல்லவரே
வல்லவரே
நன்றி
ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்
- வாழ்நாளெல்லாம்
1. புகலிடம்
நீரே பூமியிலே
அடைக்கலம்
நீரே தலைமுறை தோறும் - 2 - நல்லவரே
2. உலகமும்
பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும்
இருக்கின்ற என் தெய்வமே - 2 - நல்லவரே
3. துன்பத்தைக்
கண்ட நாட்களுக்கு
ஈடாக
என்னை மகிழச் செய்யும் - 2 - நல்லவரே
4. அற்புத
செயல்கள் காணச் செய்யும்
மகிமை
மாட்சிமை விளங்கச் செய்யும் - 2 - நல்லவரே
5. செய்யும்
செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள்
அனைத்திலும் வெற்றி தாரும் - 2 - நல்லவரே
6. நாட்களை
எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம்
நிறைந்த அறிவைத் தாரும் - 2 - நல்லவரே
7. ஆயுள்
நாட்கள் எழுபது தான்
வலிமை
மிகுந்தோர்க்கு எண்பது தான் - 2 - நல்லவரே
8. ஆயிரம்
ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து
போன ஓர் நாள் போல - 2 - நல்லவரே
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment