வாரும் பரனாவியே
தாரும் உந்தன் கிருபைகளை
அடியார்
நெஞ்சம் அனல் கொண்டெரிய
அன்பரே
உம்மை அண்டி வந்தோம் - 2
இந்நேரமே
உம் ஆவியால்
அடியார்
நெஞ்சம் நிரப்பிடுமே
1. சத்திய ஆவியானவரே
நித்திய பாதை காட்டிடுமே - 2
பாவியர் நெஞ்சம்
பரன் உம்மைக் காண
ஆத்தும கண்கள் திறந்திடுமே - 2 - இந்நேரமே
2. எங்கள் நெஞ்சம் பாழ் நிலமாம்
ஏழை மீதும் அருள் பொழியும் - 2
மாசுடர் அருளே
மங்கிடா திருவே
மாந்தர்கள் எம்மை நோக்கிடுமே - 2 - இந்நேரமே
3. ஒவ்வொரு நாளும் புது எண்ணெய்யால்
ஒவ்வொரு நாளும் புது பெலத்தால் - 2
நிரப்புவேன் என்றும் மொழிந்த என் தேவா
நிரப்பிடும் எங்கள் உள்ளங்களை - 2 - இந்நேரமே
- Bro. Vincent Selvakumar
YouTube Link
No comments:
Post a Comment