1. பூ நிலா உள்ள ராவில்
நட்சத்திரம்
மின்னிடவே
விண்ணகத்தின்
தூதர்கள்
தாலாட்டு
பாடினாரே - 2
ஆஹா ஹா ஆஹா
ஹா - (2)
பனி தூவும்
இரவினில் பெத்லகேம் தொழுவினில்
பாலகன்
ஜென்மித்தாரே
ஆனந்தத்தோடு நாம் பாடிப் புகழ்ந்திட
பாரினில்
ஜென்மித்தாரே - 2
ஆ
ஆ என் ஆனந்தம் - (3)
பாரினில்
ஜென்மித்தாரே
2. இராக்கால
நேரமதில்
மேய்ப்பர்கள்
நடுவினிலே
தூதர்கள்
பாடிடவே
உன்னதத்தில்
மகிமை - 2 - ஆஹா ஹா
தாவீதின்
நகரினில் பெத்லகேம் ஊரினில்
பாலகன்
ஜென்மித்தாரே
பாவத்தை
நீக்கவே சாபங்கள் தீர்க்கவே
தொழுவத்தில்
ஜென்மித்தாரே - 2 - ஆ ஆ
3. ஏழைகளாம் நாங்களும்
தூதர்களோடுக் கூடி
ராஜாதி
ராஜன் முன்னில்
ஓசன்னா
பாடிடுவோம் - 2 - ஆஹா ஹா
ஏழையாம்
எங்களை உம்மோடு சேர்த்திட
வேகமாய்
வந்திடுமே
ராஜாதி
ராஜனாம் இயேசு மகாராஜன்
தேவாதி
தேவமைந்தா - 2 - ஆ ஆ
- Prof. Korah Mani & A.J. Jacob
No comments:
Post a Comment