17 December 2025

புல்லணையிலே பாலகன்

புல்லணையிலே பாலகன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புல்லணையிலே பாலகன்

            தேவ மைந்தன் பிறந்தார் இன்று

            அன்னை மரியே தெரியுமா

            இவர் கடலில் நடப்பாரென்று

 

                        விண்ணை விட்டு வந்த தேவன் இவர்

                        சமாதான காரணரே

                        நமக்காய் தாழ்மை தரித்தார்

                        நம் பாவம் சுமந்திடவே

 

1.         விண்ணையும் மண்ணையும் படைத்தவர் இவரென்று அறிவாயோ

            கானாவூரினில் அற்புதம் செய்திட வருவாரோ

            மன்னவன் இயேசு இவர்தானே மன்னிக்கும் மாட்சிமை தந்தவரே

 

                        கண்கள் திறந்திட செவிகள் கேட்டிட மரித்தோர் உயிர்த்தாரே

                        ஊனர் நடந்திட ஊமை பேசிட உன்னத தேவ மகிமை - புல்லணையிலே

 

2.         குருடரின் கண்கள் திறந்திடும் இவரால் அறிவாயோ

            காற்றும் கடலும் அமர்ந்திடும் இவரால் அறிவாயோ

            கன்மலை நீரை தந்தவரே கண்மணிப் போல காத்தவரே

 

                        கண்கள் திறந்திட செவிகள் கேட்டிட மரித்தோர் உயிர்த்தாரே

                        ஊனர் நடந்திட ஊமை பேசிட உன்னத தேவ மகிமை - புல்லணையிலே

 

 

- Ivan Jeevaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...