இயேசுவின் சாயல் உனக்குள் வெளிப்படும்
கிறிஸ்துவின்
ஜீவன் உன்னை உயிர்ப்பிக்கும் - 2
ஆத்துமாவே
நீ கலங்கிடாதே
சிறுமையைக்
கண்ணோக்கிப் பார்க்கிறாரே - 2
பெரிய
ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை
பெருமைப்படுத்திடுவார் - 2
ஏற்ற
காலத்தில் தீவிரமாய்
கர்த்தரே
இதை செய்திடுவார் - 2
1. ஆகாத கல்லென்று
வெறுத்தவர் முன்
மூலைக்கு
தலை கல்லாய் மாற்றிடுவார் - 2
சகல ஜாதிகளால்
விரும்பப்படுவாய்
இயேசுவின்
மகிமையால் நிரம்பிடுவாய் - 2
இந்த வருஷத்தில்
இயேசு உன்னில் வெளிப்படுவார் - (2) - பெரிய
2. உடைபட்ட
வாழ்க்கையை வணைந்திடுவார்
கனத்திற்குரிய
நாட்களை நிலைநாட்டுவார் - 2
விழுந்துபோன
இடத்தில் தலையை நிமிரச் செய்வார்
ராஜாவின்
பந்தியில் உன்னை அமரச் செய்வார் - 2
இந்த வருஷத்தில் அதிகமாய் கௌரவிப்பார் - (2) - பெரிய
- Dr. Paul Dhinakaran, Stella Ramola and Daniel Davidson
No comments:
Post a Comment