26 December 2025

வாலில்லை என் மகனே நீ தலைதான்

வாலில்லை என் மகனே நீ தலைதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாலில்லை என் மகனே நீ தலைதான்

                        கீழில்லை என் மகனே நீ மேல்தான்

                        தரித்தேன் என் நாமம் உந்தன் மீதில் தான்

                        வைப்பேன் என்றும் அலங்கார சீயோனாய்

 

1.         ஒரு வழியாய் சத்துரு வருவான்

            ஏழு வழியாய் ஓடிப் போவான் - 2

            கர்த்தர் நின்று உனக்காய் யுத்தம் செய்வார்

            கண்களால் கண்டு நீ மகிழ்வாய் - 2 - வாலில்லை

 

2.         கூடையும் மா பிசையும் உன் தொட்டியும்

            என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிடும் - 2

            கையிட்டு செய்யும் வேலைகளிலும்

            கர்த்தரின் ஆசீர்வாதங்கள் நிலைக்கும் - 2 - வாலில்லை

 

3.         வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஸ்தலத்தில்

            கொண்டு சேர்ப்பேன் கர்த்தரின் வேளையில் - 2

            கர்ப்பக்கனி நிலக்கனிகளிலும்

            பரிபூரண நன்மை காண்பாய் என்றென்றும் - 2 - வாலில்லை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...