வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குமாறா
நேசரவர் - உனக்கு
வாக்குத்தத்தம்
செய்தவர் - என்றும்
வாக்குமாறா
நேசரவர்
திரும்பவும் தருவேன் என்கிறார்
இழந்ததைத் தருவேன் என்கிறார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திரும்பவும் உனக்கு தந்திடுவார் - 2
1. கண்ணீர்
யாவும் துடைத்திடுவார்
துயரங்கள்
போக்கிடுவார்
நிந்தைகள்
யாவும் நீக்கிடுவார்
அற்புதம்
கண்டிடுவாய் - 2
2. இழந்ததைத்
திரும்பவும் பெற்றிடுவாய்
நிரம்பி
வழியச் செய்வார்
நன்மைகள்
பலவும் செய்திடுவாய்
இயேசுவை
உயர்த்திடுவாய் - 2
- Bro. Mohan C Lazarus
No comments:
Post a Comment