பல்லவி
வாயிலண்டை வந்து நிற்கிறேன் - இந்தப்
பாவியேனைப்
பாரும் இயேசுவே!
1. எந்தன்
ஆடை கந்தை கந்தையே - கையில்
ஏதுமில்லை
கறைகள் அன்றியே!
2. வாய்
திறந்து வார்த்தை சொல்லவோ - எனக்கு
வலிமை
ஏதும் இல்லை இல்லையே!
3. கதவருகில்
அழுது நிற்கிறேன் - தட்ட
கை
பலமோ இல்லை அன்பரே!
4. இயேசுவே
என் நேசரே என்கிறேன் - வேறு
ஏதுமே
பேச நான் அறிகிலேன்!
5. வாயிலே
நீர் ஆவீர் அல்லவோ - எனக்கு
வாழ்வருள வேண்டும் நீர் அண்ணலே!
- தி. தயானந்தன் பிரான்சிஸ்
No comments:
Post a Comment