23 December 2025

வாரீரோ வினை தீரீரோ எனைக்

வாரீரோ வினை தீரீரோ எனைக்-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

210. இராகம்: இந்துஸ்தானி                                      தாளம்: ஆதிதாளம்.

 

                             பல்லவி

 

                   வாரீரோ? வினை தீரீரோ? எனைக்

                   காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு

 

                             அனுபல்லவி

 

            வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமி;

            பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. - வாரீரோ

 

                             சரணங்கள்

 

1.         தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,

            சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே

            கானகமே மேவும் மானது போலானேன்;

            வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? - வாரீரோ

 

2.         அட்ட[2] திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்

            இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்

            அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!

            அடுபடையாக[3] நின்று தடு படை[4] செய்வீர், யேசு, - வாரீரோ

 

3.         கோழி தன் குஞ்சு தன்னைக் கூவியழைக்கு நேராய்

            கூளி[5] எனை யிறாஞ்சி[6] ஆழியிலாக் கிடாமல்

            கூப்பிட்டீரே; எனக்கு மாப்பீட்டீரே! ஒதுங்க

            தாப்பிட்டீரே[7]; வர வாக்கிட்டீரே! பின்னை - வாரீரோ

 

4.         காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்றகோன் நீர்

            கண்டுபிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்

            கருத்துடனே மிக உரித்துடனே[8] இரு

            கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். - வாரீரோ

 

5.         வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,

            கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;

            கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;

            கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி[9]. - வாரீரோ

 

 

- அருட்திரு. மு. தேவசகாயம்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மயங்கும்-அலைதல்

[2] எட்டு

[3] அழிக்கும் படை

[4] மறுக்கிற ஆயுதம்

[5] பிசாசு

[6] கவரும் ஒலி

[7] பாதுகாப்பு

[8] உரிமை

[9] கீர்த்தி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...