22 December 2025

பூவாய் பூத்திடும் பனியுலகம்

பூவாய் பூத்திடும் பனியுலகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பூவாய் பூத்திடும் பனியுலகம்

            கொஞ்சம் கொஞ்சமாய் நடுங்கிடுதே

 

            குளிரும் கூட குழந்தைக்காக

            கொஞ்சி கொஞ்சியே ஏங்குது பார் - 2

 

                        சந்தோஷ செய்தி கேட்க ஆயர் கூட்டம் மகிழ

                        ஞானியரும் செல்ல

                        பாலர் பாதம் தான் பணிந்தார்

                        நாமும் பாலர் பாதம் பணிவோம்

 

1.         நற்செய்தி தொனித்திட விரைந்தனர் சாஸ்திரிகள்

            அன்பாக பரிசளிக்க காணிக்கைகள் கூட

                        மின்னிடும் பொன்னும் கவர்ந்திடும் போளமும்

                        வீசிடும் தூபவர்க்கம் படைத்தனரே - 2 - சந்தோஷ

 

2.         பாவமாம் பூவுலகில் போக்கிட பிறந்தார்

            தாவீதின் மைந்தனாய் தாழ்மையாய் பிறந்தார்

                        விண்மீன்கள் தோன்றிட பாடல் பாடி மகிழ்ந்திட

                        பூமியெல்லாம் ஆர்ப்பரித்து கொண்டாட்டமே - 2 - சந்தோஷ

 

 

- J. Aniba Suresh

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...